Home One Line P2 ஜோ லோவுக்கு வழங்கப்பட்ட சைப்ரஸ் தீவின் கடப்பிதழ் இரத்து செய்யப்படும்!

ஜோ லோவுக்கு வழங்கப்பட்ட சைப்ரஸ் தீவின் கடப்பிதழ் இரத்து செய்யப்படும்!

704
0
SHARE
Ad

சைப்ரஸ்: சைப்ரஸ் தீவு குடியரசின் எந்தவொரு கடப்பிதழ்களையும் வெளிநாட்டு செல்வந்த முதலீட்டாளர்களுக்கு, சர்ச்சைக்குரிய குடியுரிமைக்கான திட்டத்தின் கீழ் தவறாக வழங்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டால் அவை இரத்து செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

தப்பியோடிய மலேசிய தொழிலதிபர் ஜோ லோ, கடந்த 2015-ஆம் ஆண்டில் அத்தீவின் கடப்பிதழைப் பெற்றார். சர்ச்சைக்குரிய குடியுரிமைக்கான திட்டத்தின் கீழ் இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம் என்று நிக்கோஸ் அனஸ்தாசியேட்ஸ் கூறினார்.

இதுபோன்ற 10-லிருந்து 15 வழக்குகள் இருக்கக்கூடும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கடுமையான நிபந்தனைகளை மீறி குடியுரிமையைப் பெற்றவர்களிடமிருந்து அது விரைவில் பறிக்கப்படும்என்று அவர் கூறினார்.