Home One Line P1 “நான் மாமன்னரைச் சந்தித்தேனா? இது கோழைகளின் வஞ்சக விளையாட்டு!”- அன்வார்

“நான் மாமன்னரைச் சந்தித்தேனா? இது கோழைகளின் வஞ்சக விளையாட்டு!”- அன்வார்

668
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று புதன்கிழமை காலை இஸ்தானா நெகாராவில் மாமன்னரைச் சந்தித்ததாகக் கூறப்படும் செய்திகள் போலியானவை என்று தெரிவித்துள்ளார்.

இது போலி செய்தி என்பதால் புறக்கணித்துவிடுங்கள். அது ஒரு கனமான (குற்றச்சாட்டு). சரியானதல்ல. இன்று காலையிலிருந்து நான் இங்கே (நாடாளுமன்றம்) இருக்கிறேன்,” என்று அவர் காலை நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

சுல்தான் அப்துல்லாவை சந்திக்க அவர் முயற்சிக்கிறாரா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அவ்வாறு ஒன்றும் இல்லை. மூன்று வாரங்களுக்கு முன்பு (அக்டோபர் 16) இயல்பான முறையில் சந்தித்தேன். இது இரகசியம் அல்ல, அவ்வாறு நடக்கவே இல்லை. இது சக்தியற்றவர்களின் கோழைத்தனமான முயற்சி. சக்தி இல்லாதபோது, ​​அவதூறு மற்றும் வஞ்சகத்தைப் பயன்படுத்துவர்,”என்று அன்வார் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, பிகேஆர் தகவல் தொடர்புக் குழுத் தலைவர் பாஹ்மி பாட்ஸிலும் இன்று காலை அரண்மனையில் அன்வார் இருப்பதை சுட்டிக்காட்டி வெளியான செய்தியை மறுத்தார். இம்மாதிரியான தகவல்களை பரப்புவது அரசியல் நோக்கம் கொண்டதாகவும், இந்த விஷயத்தில் காவல் துறையில் புகார் அளிக்க இருப்பதாகவும் அவர் விவரித்தார்.