Home One Line P1 “உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட கூட்டம் குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும்!”- ராயிஸ் ஹுசேன்

“உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட கூட்டம் குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும்!”- ராயிஸ் ஹுசேன்

633
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான பாஸ் அல்லது அம்னோவுடன் இணைந்து செயல்படக்கூடாது என்ற ஒப்பந்தம் தற்போது தகர்க்கப்பட்டு சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பெர்சாத்து கட்சியின் கொள்கை மற்றும் வியூக குழுத் தலைவர் ராயிஸ் ஹுசேன் கூறியுள்ளார்.

“பிகேஆர் துணைத் தலைவரான அஸ்மின் அலி தனது கட்சித் தலைவருடனோ அல்லது கட்சியுடனோ இணக்கமாக இல்லாத நிலை இருக்கலாம், அது அவருடைய நிலைப்பாடு. ஆயினும், அஸ்மின் தனது எண்ணத்தை இன்னும் தெளிவாக வெளிப்படுத்தவில்லை. மலேசியர்களின் எதிர்ப்பார்ப்புக்கு எதிராக இது செயல்படுத்தப்படுகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்மின் அலி 22 அம்னோ தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐந்து பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த போது, ​​அனைவரின் செயல்திறனை அளவிடும் நோக்கில் அது ஏற்படுத்தப்பட்டதாகவும், தம்மை நாட்டின் பிரதமர் என்ற எல்லைக்குள் அவராகவே நுழைத்துக் கொண்டதை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு தமக்கு உரிமை உண்டு என்று அவர் சொல்கிறாரா? இந்த கூட்டத்தில் என்ன நடந்தது என்ற தெளிவு தமக்கு இல்லை என்று டாக்டர் மகாதீர் முகமட் கூட நேற்று (செவ்வாய்க்கிழமை) கூறியிருந்தார். முழுமையான வஞ்சகத்துடன் இது நடத்தப்பட்டுள்ளது. அஸ்மின், பொருளாதார விவகார அமைச்சராக, அவரது வேலைகளான, மேம்பட்ட வருமானம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெற்றுத் தர வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அஸ்மின் அலியுடனான சந்திப்பில், நஜிப்பின் உறவினர் (ஹிஷாமுடின்) ஒருவர் கலந்து கொண்டார். நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை கவிழ்ப்பதன் மூலம் நஜிப்பை விடுவிக்க ஏதேனும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதா? எனக்குத் தெரியாது, ஆனால் இதுவும் பல கேள்விகளுடன் தொடர்கிறது” என்று அவர் கூறினார்.

“தனது சொந்த கட்சியில் எந்த கூட்டங்களிலும் கலந்து கொள்ளாததால், அஸ்மின்  துல்லியமான விளக்கத்துடன் இது குறித்து பதில் கூற வேண்டும்.” என்று அவர் கேட்டுக் கொண்டார்.