
கோலாலம்பூர்: கோலா க்ராவ் நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில் முகமட் சைட் மற்றும் பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் தாஜுடின் அம்துல் ரஹ்மானுக்கு இடையில் வாய் சட்டை ஏற்பட்டதாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு முன் இந்த வாய் சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இஸ்மாயில் முகமட் சைட் தனது மகளின் புகைப்படங்கள் தொடர்பாக தாஜுடினை எதிர்கொண்டதை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மற்றொரு தலைவரை ஆதரிப்பதற்காக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வதாக தாஜுடின் தன் மீது பழி சுமத்துவதாக இஸ்மாயில் கூறினார். உண்மையில், அவர்கள் நோய் வாய்ப்பட்ட தம் மகளை சந்திக்க வந்தததாக இஸ்மாயில் கூறினார்.
அரசியல் செயலாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இருவரையும் விலக்கி விட்டதும் இஸ்மாயில் ஊடகங்களுக்கு அவர் ஏன் வருத்தப்பட்டார் என்பதைக் கூறினார்.
“எனது நண்பர்கள் என் மகளைச் சந்திக்கும் படங்களுடன் அவர் ஒரு சிக்கலை ஏற்படுத்தி உள்ளார். வேறொரு தலைவருக்கு ஆதரவாக நான் ஒப்பந்தம் செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். அவர் அதை எப்படிச் செய்ய முடியும், அது சரியல்ல,” என்று அவர் கூறினார்.
இஸ்மாயில் மற்றொரு தலைவர் என்பதன் அர்த்தத்தை விரிவாகக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்மாயில் அந்த இடத்தை விட்டு வெளியேறிய பிறகு, தாஜுடின் ஊடகங்களுடன் பேசுவதற்காக நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தார்.
இது ஒரு தவறான புரிதல் என்று அவர் தெரிவித்தார்.
“நண்பர்களிடையே தவறான புரிதல். அவ்வளவுதான். இன்னும் என்ன? நீங்கள் அனைவரும் ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள்?” என்று அவர் பதிலளித்துள்ளார். அண்மையில் அஸ்மினை சந்திக்கச் சென்ற தேசிய முன்னணி உறுப்பினர்களில் தாஜுடின் இடம்பெறவில்லை.