Home One Line P1 யுபிஎஸ்ஆர் : தேசிய – சீனப் பள்ளிகளை விட தமிழ்ப் பள்ளிகள் சிறப்பான தேர்ச்சி விழுக்காடு

யுபிஎஸ்ஆர் : தேசிய – சீனப் பள்ளிகளை விட தமிழ்ப் பள்ளிகள் சிறப்பான தேர்ச்சி விழுக்காடு

5896
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – 2019-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாடு தழுவிய நிலையில் தமிழ்ப் பள்ளிகள் மிகச் சிறப்பான தேர்ச்சி விழுக்காடுகளைப் பெற்று தமிழ்ப் பள்ளி ஆர்வலர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக தேசிய அளவில் தேசிய (மலாய்) பள்ளிகள், மற்றும் சீனப் பள்ளிகளை விட, தமிழ்ப் பள்ளிகள் யுபிஎஸ்ஆர் தேர்வுகளில் அதிகமான அளவில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருப்பது தமிழ்ப் பள்ளிகளுக்கு பெருமையையும், தமிழ்ப் பள்ளிகளின் மாணவர்கள் யாருக்கு சளைத்தவர்கள் இல்லை என்ற நம்பிக்கை உணர்வையும் தோற்றுவித்துள்ளது.

தேசிய அளவிலான புள்ளி விவரங்களின்படி தேசிய ஆரம்பப் பள்ளிகள் யுபிஎஸ்ஆர் தேர்வுகளில் 69.77 விழுக்காட்டைப் பெற்றிருக்கின்றன.

#TamilSchoolmychoice

சீனப் பள்ளிகளோ 66.16 விழுக்காடு தேர்ச்சிகளைப் பெற்றிருக்கின்றன.

ஆனால் தமிழ்ப் பள்ளிகளோ, 78.51 விழுக்காட்டு தேர்ச்சியைப் பதிவு செய்து மற்ற பள்ளிகளை விட சுமார் 10 விழுக்காடு அதிக அளவிலான தேர்ச்சி விழுக்காட்டைப் பெற்றுள்ளது என்ற செய்தி, தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், தமிழ் சமூகத்தினர் என அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.