கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ அசார் அசிசான் ஹாருன் இது குறித்து அறிவித்தார்.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் ஜனவரி 4-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிமானிஸ் இடைத்தேர்தலில் 29,664 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 14-வது பொதுத் தேர்தலில் கிமானிஸ் நாடாளுமன்றத்தில் டத்தோஶ்ரீ அனிபா அமானின் வெற்றியை பொதுத் தேர்தல் நீதிமன்றம் இரத்து செய்ததை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.