கோலாலம்பூர்: அனைத்து பிடிபிடிஎன் கடனாளிகளின் 50 விழுக்காட்டு கடனை அகற்ற கல்வி அமைச்சகம் முன்மொழியவில்லை என்று துணை கல்வி அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
இந்த சலுகைகளை அமல்படுத்த வேண்டுமானால், அரசாங்கம் 29 பில்லியன் ரிங்கிட்டை செலவிட வேண்டியிருக்கும் என்றும், இது இனி கடன் வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் மொத்த கடன்களில் 50 விழுக்காடாகும் என்று அவர் கூறினார்.
“இந்த தொகை பட்டப்படிப்பு முடியும் வரை, 1.2 மில்லியன் புதிய கடன் வாங்குபவர்களுக்கு நிதியளிப்பதற்கான மொத்த ஒதுக்கீட்டிற்கு சமம்.”
“ஒட்டுமொத்த கடன் நிர்வாகத்தை மேம்படுத்துவதில் கல்வி அமைச்சு கவனமாக செயல்பட வேண்டும்,” என்று அவர் நேற்று திங்கட்கிழமை கூறினார்.