“டபாங் 3-இல் அவர்கள் எதிர்பார்க்கும் அனைத்து கூறுகளும் உள்ளன. ‘டபாங் 3’ குடும்ப உணர்வு, நகைச்சுவை, ஹீரோவை மகிமைப்படுத்தும் காட்சிகள் மற்றும் நடனங்கள் என்று பல அம்சங்கள் உள்ளன” என்று சல்மான் கான் கூறினார்.
“ஆரம்பத்தில் நான் தமிழ் வரிகளை சொந்தமாக மொழிப்பெயர்க்க முயற்சித்தேன். பிரபு தேவாவின் உதவியாளர் எனது எல்லா முயற்சிகளையும் சரி செய்தார். ஆனால், பின்னர், எனது தமிழ் உச்சரிப்பு சரியானதாக இல்லை என்பதால் பிரபு வெளியீட்டை நிராகரித்தார்” என்று சல்மான் மேலும் கூறினார்.
“சரியான கதை வழங்கப்பட்டால், நான் இங்கே தமிழ் படம் செய்து இந்தியில் மொழிப்பெயர்க்க விரும்புகிறேன். “ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.