Home One Line P2 குடியுரிமை திருத்தச் சட்டம்: டில்லியில் கைபேசி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

குடியுரிமை திருத்தச் சட்டம்: டில்லியில் கைபேசி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

724
0
SHARE
Ad

புது டில்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான தொடர் போராட்டங்கள் காரணமாக டில்லியில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் கைபேசி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் உத்தரவின் காரணமாகத்தான் கைபேசி சேவை நிறுவனமான ஏர்டெல் இந்த இடைநிறுத்தத்தை செய்ததாகத் தெரிவித்திருக்கிறது.  

இதனிடையே, இன்று வியாழக்கிழமை டில்லி செங்கோட்டை அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக செயற்பாட்டாளர்களான ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

மேலும், இந்த சட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் இறங்குவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர். பல இடங்களில் போராட்டம் நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.