ஏர் ஏசியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறுகையில், விமான பயணச் சீட்டுகள், சந்தான் (Santan) உணவக வணிகம், தங்குமிடத் தளங்கள் மற்றும் சொந்த இசை அடையாளமான ரெட் ரெக்கார்ட்ஸை (Red Records) விற்பனை செய்வதோடு குழுவின் சலுகைகளை, அது மேலும் பன்முகப்படுத்தும் என்று கூறினார்.
கடந்த செவ்வாயன்று இங்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏர் ஏசியா ஒரு நிபுணத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக வளர்ந்துள்ளது என்றார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் தற்போதைக்கு ஏர் ஏசியா பண்டல் டீல்ஸ்லில் 100-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் இருப்பதாகவும், இது பிற நகரங்களுக்கும் குறிப்பாக பினாங்கு, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் அடுத்த ஆண்டு முதல் விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறினார்.