சிங்கப்பூர்: பருவநிலை மாற்றம் காரணமாக சிங்கப்பூர் எதிர்பார்த்ததை விட மோசமான விளைவுகளை அனுபவிக்கக்கூடும் என்று பருவநிலை அறிவியலாளர் பெஞ்சமின் ஹார்டன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் பருவநிலை ஆராய்ச்சி மையத்தின் கணிப்புகளின்படி, சிங்கப்பூரில் 2100-க்குள் கடல் மட்டம் ஒரு மீட்டர் உயரும் என்று குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், கடல் நீரின் அளவு அந்த கணிப்பை விட அதிகமாக இருக்கலாம் என்று பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.
“சிங்கப்பூரில் கடல் மட்ட அளவு 1.5 மீட்டராக உயரக்கூடும், அது எங்கள் மதிப்பீடு.”
“சிங்கப்பூரர்களையும் அவர்களின் உள்கட்டமைப்பையும் பாதுகாக்க, அரசாங்கம் அதிக அளவிலான நீர் மட்டத்தை எதிர்பார்க்க வேண்டும்.”
சிங்கப்பூரின் உட்பகுதிகளான பிஷன் மற்றும் டோவா பயோஹ் ஆகியவை ஆபத்தில் இருக்கும் பகுதிகளாக கணிக்கப்பட்டுள்ளது.
கடல் மட்டம் ஆண்டுக்கு 3.2 மில்லிமீட்டர் (மிமீ) அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது என்றும், இது 6,000 அல்லது 7,000 ஆண்டுகளில் மிக விரைவான அதிகரிப்பு என்றும் ஹார்டன் கூறினார்.
“சிங்கப்பூரைப் பொறுத்தவரை, அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில், கடல் மட்டம் 20 முதல் 30 சென்டிமீட்டர் (செ.மீ) வரை உயரும்” என்று அவர் கூறினார்.