Home One Line P2 தமிழக உள்ளாட்சித் தேர்தல்கள் – இறுதி முடிவுகள் என்ன?

தமிழக உள்ளாட்சித் தேர்தல்கள் – இறுதி முடிவுகள் என்ன?

917
0
SHARE
Ad

சென்னை – பரபரப்பாக நடைபெற்று முடிந்த தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று இறுதி நிலவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

91,975 பதவிகளை நிரப்புவதற்காக கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 76.19 % வாக்குகள் பதிவானது. அதையடுத்து டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில்  77.73 % வாக்குகள் பதிவானது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் 513 மாவட்ட நிர்வாக உறுப்பினர்கள் (கவுன்சிலர்), 5087 ஊராட்சி ஒன்றிய நிர்வாக உறுப்பினர்கள்(கவுன்சிலர்) பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 515 மாவட்ட கவுன்சிலர், 5090 ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி சின்னங்கள் அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது.

கட்சிகள் கைப்பற்றிய ஒன்றிய மன்றங்களின் நிர்வாக உறுப்பினர் (கவுன்சிலர்) பதவிகளின் எண்ணிக்கை:

அதிமுக 1781

திமுக    2100

காங்கிரஸ் 132

அமமுக       94

பாஜக       85

மதிமுக      20

சிபிஎம்       33

சிபிஐ         62

பாமக      224

விசிக          8

தேமுதிக   99

தமாகா       8

நாம் தமிழர் 1

எஞ்சிய இடங்கள் : சுயேச்சைகள் வெற்றி

கட்சிகள் கைப்பற்றிய ஒன்றிய மாவட்ட மன்றங்களின் நிர்வாக உறுப்பினர் (கவுன்சிலர்) பதவிகளின் எண்ணிக்கை:

அதிமுக 214

திமுக    243

பாஜக       7

காங்கிரஸ் 15

சிபிஐ         7

சிபிஎம்       2

தேமுதிக    3

மதிமுக       1

ஊராட்சித் தேர்தல்கள் தெரிவிக்கும் அரசியல் நிலவரம் என்ன?

ஒரு கலவையான கணிப்புகளை வழங்கியுள்ளது நடந்து முடிந்த ஊராட்சி மன்றத் தேர்தல்கள்.

எல்லாக் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சி மட்டும் தனித்துப் போட்டியிட்டது. அமமுகவுக்கு பொது சின்னம் கூட ஒதுக்கப்படாத நிலையில் அந்தக் கட்சி ஒன்றிய நிர்வாக உறுப்பினர் பதவிகளில் 94 இடங்களைக் கைப்பற்றியுள்ளது அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமமுக தவிர நாம் தமிழர் கட்சி மட்டுமே தனித்துப் போட்டியிட்டது. ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளில் ஒரே ஒரு இடத்தை மட்டும் பிடித்திருந்தாலும், பொதுவில் மொத்த வாக்குகளில் கணிசமான விழுக்காட்டை நாம் தமிழர் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊராட்சித் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், தமிழக சட்டமன்றத் தேர்தல்களை இந்த முடிவுகள் எவ்விதத்திலும் பாதிக்காது என்பதே பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

காரணம், இதே கூட்டணிக் கட்சிகள் அப்போதும் இருக்குமா என்பது ஒருபுறமிருக்க, ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்களும் களமிறங்குவார்கள் என்பதால் வாக்குகள் எவ்வாறு விழும் – எவ்வாறு கட்சிகளுக்கிடையே பிரியும் – என்பதைப் பொறுத்து 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமையும்.