Home One Line P1 “எம்ஏசிசி நீதிமன்றமாக உருமாறிவிட்டதா?!”- நஜிப்

“எம்ஏசிசி நீதிமன்றமாக உருமாறிவிட்டதா?!”- நஜிப்

701
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை எம்ஏசிசி வெளியிட்ட ஒன்பது உரையாடல்கள் பதிவுகள் குறித்து 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த தகவல்களை ஏன் காவல் துறை வெளியிடாமல் எம்ஏசிசி வெளியிட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஏன் அறியப்படாத ஆதாரங்கள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத உள்ளடக்கங்கள்,  வெளிநாட்டு மன்னரின் உயர் தலைவர்கள் சம்பந்தப்பட்ட பதிவுகளை எம்ஏசிசி வெளியிட வேண்டும், எம்ஏசிசி அதிகார வரம்புக்குட்பட்ட வழக்கு இது இல்லை, காவல் துறை கீழ் இருந்திருக்க வேண்டும்”

மேலும் 1எம்டிபி வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் போது, எம்ஏசிசி ஏன் நீதிமன்றத்தை அவமதிக்கிறது? எம்ஏசிசி நீதிமன்றமாக மாறிவிட்டதா?” என்று அவர்தனதுமுகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நேற்று வெளியிடப்பட்ட உரையாடல்கள் பதிவில் நஜிப்பின் மனைவி டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர், முன்னாள் எம்ஏசிசி தலைவர் டான்ஸ்ரீ சுல்கிப்ளி அகமட்,  வெளிநாட்டுத் தலைவர் மற்றும் பல நபர்கள் சம்பந்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவுகள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து கசிந்தது என்றும், இருப்பினும் இந்த வெளிப்பாடு பொது நலனுக்காக செய்யப்பட்டதாக எம்ஏசிசி தலைவர் லத்தீபா கோயா தெரிவித்தார்.