கோலாலம்பூர்: மில்லியன் கணக்கான பிளாஸ் நெடுஞ்சாலை பயனர்கள் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 1) முதல் 18 விழுக்காடு குறைக்கப்பட்ட கட்டண விகிதங்களை அனுபவிக்கத் தொடங்குவர்.
அரசாங்கத்தின் கணக்கீடுகளின் அடிப்படையில், பிளாஸின் சலுகை மறுசீரமைப்பு மூலம், அரசாங்கமும் மக்களும் இந்த ஆண்டு மட்டும் 1.1 பில்லியன் ரிங்கிட் வரை மொத்த சேமிப்பை அனுபவிப்பார்கள்.
இந்த மறுசீரமைப்பின் மூலம், 2058 வரையிலான புதிய சலுகைக் காலப்பகுதியில் 42 பில்லியன் ரிங்கிட்டை சேமிக்க அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது.
18 விழுக்காடு தள்ளுபடியிலிருந்து 0.5 பில்லியன் ரிங்கிட் சேமிப்பு மற்றும் கட்டண விகித உயர்வை முடக்குவதற்கு அரசாங்க இழப்பீட்டுத் தொகையிலிருந்து 0.6 பில்லியன் ரிங்கிட் சேமிப்பு ஆகியவை இதில் அடங்கும்.
ஒட்டுமொத்தமாக மக்களுக்கு பயனளிக்கும் சமூக நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு இந்த சேமிப்பு செலவளிக்கப்படும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.