Home One Line P2 ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது!

799
0
SHARE
Ad

பிரிட்டன்: 47 ஆண்டுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் (இயூ) உறுப்பினராக இருந்த பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக நேற்று வெள்ளிக்கிழமை உலகின் மிகப் பெரிய அக்கூட்டணியில் இருந்து வெளியேறியது.

பிரிட்டன் இனி ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக கருதப்படாது, இருப்பினும் 2020-இன் இறுதியில் மாற்றம் காலம் முடிவடையும் வரை ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தை அது தொடர்ந்து கடைப்பிடிக்கும்.

கடந்த வாரம், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற ஒருமனதாக வாக்களித்தனர்.

#TamilSchoolmychoice

பிரஸ்ஸல்ஸ் வாக்கெடுப்பில் 621 பேர் ஆதரவளித்து வாக்களித்ததுடன், 49 பேர் அதற்கு எதிராகவும், மேலும் 13 பேர் நடுநிலையாக இருப்பதாக தெரிவித்தனர்.

கடந்த ஜூன் 2016 வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற பிரிட்டன் மக்கள் வாக்களித்தனர். இந்த எண்ணத்தை அரசாங்கம் மார்ச் 2017-இல் ஐரோப்பிய ஒன்றியத்திடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.