Home One Line P1 எம்ஏசிசி கைப்பற்றிய பொருட்களை பார்வையிட நஜிப் மற்றும் குடும்பத்தினர் தேசிய வங்கிக்கு வருகை!

எம்ஏசிசி கைப்பற்றிய பொருட்களை பார்வையிட நஜிப் மற்றும் குடும்பத்தினர் தேசிய வங்கிக்கு வருகை!

701
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், அவர்களின் மகள் நூரியானா நஜ்வா ஆகியோர் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 22) தேசிய வங்கியில் வைக்கப்பட்டுள்ள ஆபரணங்களை பார்வையிட வந்துள்ளனர்.

மூவரும் காலை 9.15 மணியளவில் அங்கு வந்ததாகவும், அப்பொருட்கள் யாவும் 1எம்டிபி நிதிகளுடன் தொடர்புடையது என்றும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

நஜீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மோசடி வழக்கில், கடந்த 2018-அம ஆண்டு மே 17-ஆம் தேதி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைப்பற்றிய பொருட்களை பிரதிவாதிகள் ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதித்ததாக பிப்ரவரி 17 அன்று தெரிவிக்கப்பட்டது.

துணை அரசு வழக்கறிஞர் தெங்கு அமீர் தெங்கு அப்துல் ரஹ்மான், பிப்ரவரி 22, 23 மற்றும் 29 மற்றும் மார்ச் 1 ஆகிய நான்கு தேதிகளை சமர்ப்பித்ததை அடுத்து நீதிபதி முகமட் ஜெய்னி மஸ்லான் இந்த விவகாரத்தை ஆய்வு செய்து அனுமதி அளித்தார்.