இன்று எந்த முடிவும் எடுக்கப்படாது – அறிவிக்கப்படாது – என தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, பெட்டாலிங் ஜெயா ஷெரட்டான் தங்கும் விடுதியிலிருந்து தலைவர்களும் ஆதரவாளர்களும் வெளியேறத் தொடங்கினர்.
புதிய அரசாங்கம் நாளை திங்கட்கிழமை அமைக்கப்படலாம் என்றும் எனினும் இது மாமன்னரின் ஒப்புதலைப் பொறுத்த விவகாரம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Comments