Home One Line P1 காசானா நேஷனல் அதிகாரிக்கு கொவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது!

காசானா நேஷனல் அதிகாரிக்கு கொவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது!

554
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 கொரொனாவைரஸ் பாதிப்புக்கு ஆளான நான்கு பேரில், தங்கள் அதிகாரி ஒருவரும் உட்பட்டிருப்பதாக காசானா நேஷனல் பெர்ஹாட் (கசானா) உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த அதிகாரி இன்னும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனவே, காசானா தனது ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க சுகாதார அதிகாரிகள் மற்றும் அதன் அலுவலக வளாகத்தின் நிர்வாகத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஏற்கனவே, அந்த அதிகாரியுடன் நேரடி தொடர்பில் இருந்த நபர்களை அடையாளம் காண சுகாதார அதிகாரத்திற்கு உதவுவதும் இதில் அடங்கும் என்று அது கூறியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் போது ஏதேனும் கவனக்குறைவு இருந்திருந்தால் அதற்கு காசானா மன்னிப்பு கோருவதாகவும் அது கூறியுள்ளது.

ஜனவரி மாத நடுப்பகுதியில் சீனாவின் ஷாங்காய்க்கு அந்த சம்பந்தப்பட்ட அதிகாரி பயணம் மேற்கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.