Home One Line P1 மத்திய அமைச்சரவை அமைப்பது குறித்து எதுவும் பிரதமரிடம் பேசவில்லை!- அபாங் ஜொஹாரி

மத்திய அமைச்சரவை அமைப்பது குறித்து எதுவும் பிரதமரிடம் பேசவில்லை!- அபாங் ஜொஹாரி

563
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சரவாக்கின் ஜிபிஎஸ் தலைவர் அபாங் ஜொஹாரி ஓபெங் நேற்று வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சரவை அமைப்பது தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதிக்க பிரதமர் மொகிதின் யாசினை சந்தித்ததாகக் கூறப்படுவதை மறுத்தார்.

அமைச்சரவையில் ஜிபிஎஸ் ஈடுபாடு குறித்து ஏதேனும் முடிவு இருக்கிறதா என்று கேட்டபோது, ​​சரவாக் முதல்வரும், பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சாத்து (பிபிபி) தலைவருமான அபாங் ஜொஹாரி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

எவ்வாறாயினும், இன்று சனிக்கிழமை வரை காத்திருக்குமாறு அவர் செய்தியாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

“காத்திருங்கள். பிபிபி கூட்டமொன்று உள்ளது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்,

கட்சியின் உச்சமட்டக் குழு கூட்டம் சனிக்கிழமையன்று கூச்சிங்கில் உள்ள ஜாலான் பாக்கோவில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற உள்ளது.

கடந்த செவ்வாயன்று, ஜிபிஎஸ் அமைச்சரவையின் ஒரு பகுதியாக இருப்பது நாட்டின் நலன்களுடன், ஒப்பிடும்போது அது இரண்டாம் நிலையானது என்று அவர் கூறினார்.

இந்த விஷயத்தில் முடிவெடுக்க தனக்கு சிறிது நேரம் தேவைப்படும் என்றும் அபாங் ஜொஹாரி கூறினார்.