Home One Line P1 பேராக்: மாநில மந்திரி பெசாராக மீண்டும் அகமட் பைசால் அசுமு நியமனம்!

பேராக்: மாநில மந்திரி பெசாராக மீண்டும் அகமட் பைசால் அசுமு நியமனம்!

603
0
SHARE
Ad

ஈப்போ: பேராக் மாநில மந்திரி பெசாராக மீண்டும் டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமு நியமிக்கப்பட்டார்.

13-வது பேராக் மாநில மந்திரி பெசாராக சுல்தான் நஸ்ரின் முன்னிலையில் கோலா காங்சாரில் உள்ள இஸ்தானா இஸ்கண்டாரியாவில் பிற்பகல் 3.30 மணியளவில் அவர் பதவியேற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் ஈப்போ உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிஷாம் ஹாஷிம் முன்னிலையில்
நியமனக் கடிதத்தில் கையெழுத்திட்டார்.

#TamilSchoolmychoice

மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் அகமட் பைசாலை முதலமைச்சராக நியமிக்க சுல்தான் நஸ்ரின் ஒப்புக் கொண்டார்.

14- வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அவர் தலைமையிலான மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் வீழ்ந்ததை அடுத்து செவ்வாயன்று அகமட் பைசால் பேராக் மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகினார்.