Home One Line P1 கொவிட் – 19 : மலேசியாவில் மரண எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

கொவிட் – 19 : மலேசியாவில் மரண எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

492
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை (மார்ச் 21) மேலும் நால்வர் கொவிட் 19 பாதிப்பால் மரணமடைந்ததைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இது இன்று மாலை 6.30 வரையிலான நிலவரமாகும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ நூர் ஹிஷாம் அப்துல்லா (படம்) தெரிவித்தார்.

நேற்றுவரையில் 4 மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில், 5-வதாக மரணமடைந்தவர் கடந்த மார்ச் 18-இல் மரணமடைந்த 79 வயது முதிய மாது ஆவார். இவர் போர்னியோ மெடிக்கல் சென்டரில் கடந்த மார்ச் 16-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 5 நாட்களுக்கு காய்ச்சல், இருமல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

ஐந்தாவதாகப் பலியான இவரின் 40 வயது மகளும் பலியானது இன்னொரு சோகமாகும். இவர் சரவாக் பொது மருத்துவமனையில் மார்ச் 18-ஆம் தேதி மரணமடைந்தார். மார்ச் 7 முதல் காய்ச்சல், இருமல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். மார்ச் 21-ஆம் தேதி மரணமடைந்த இவர் மலேசியாவில் கொவிட் 19-க்குப் பலியாகும் 6-வது நபராகும்.

#TamilSchoolmychoice

ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசல் இஸ்லாமிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொவிட் 19 பீடிக்கப்பட்ட நோயாளியுடன் தொடர்பில் இருந்த 57 வயது மலேசியர் மரணமடைந்த 7-வது நபராவார். இவர் வியட்னாமுக்கும் பயணம் செய்திருக்கிறார். மார்ச் 18-ஆம் தேதி காய்ச்சல், இருமல் காரணமாக கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மார்ச் 21-ஆம் தேதி காலமானார்.

கொவிட-19 பாதிப்பால் மரணமடைந்த 69 வயதான 8-வது நபரும், ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவராவார். கடந்த மார்ச் 16-ஆம் தேதி தும்பாட் (கிளந்தான்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் மார்ச் 12 முதல் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இவரது உடல்நிலையும் மோசமாகி இன்று மரணமடைந்தார்.

இன்றுவரையில் (மார்ச் 21) 153 புதிய கொவிட்-19 பாதிப்புகள் பதிவாகி, இதுவரையில் 1,183 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.