Home One Line P1 கொவிட்-19 : 48 வயது மருத்துவர் 9-வது நபராக உயிர்ப்பலி

கொவிட்-19 : 48 வயது மருத்துவர் 9-வது நபராக உயிர்ப்பலி

486
0
SHARE
Ad

கங்கார் : இங்குள்ள துவாங்கு பவுசியா மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கொவிட்-19 பாதிப்பால் இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) காலை 10.33 மணியளவில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

48 வயதான அந்த மருத்துவரின் மரணத்தோடு கொவிட்-19 பாதிப்பால் நாட்டில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ நூர் ஹிஷாம் அப்துல்லா உறுதிப்படுத்தியுள்ளார்.

மரணமடைந்தவர் துருக்கிக்குப் பயணம் செய்திருக்கிறார். கடந்த மார்ச் 8-ஆம் தேதிதான் நாட்டுக்குத் திரும்பியிருக்கிறார். மார்ச் 17-ஆம் தேதி மூச்சுக் குழாய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மார்ச் 18-ஆம் தேதி கொவிட் -19 பாதிப்புக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து இன்று காலையில் அவர் மரணமடைந்தார்.