கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட்-19 நோயிலிருந்து விடுபடுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் உள்ளதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஆனால், இது வரும் இரண்டு வார நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை எவ்வாறு மலேசிய மக்கள் மதித்து செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே உறுதியாகக் கூற இயலும் என்று அவர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“எல்லா மலேசியர்களும் வீட்டிலேயே இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தூய்மை ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 1) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2,908- ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 142 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இதுவரையிலான மரண எண்ணிக்கை 45- ஆக அதிகரித்துள்ளது.