Home வணிகம்/தொழில் நுட்பம் கசானா நேஷனல் பெர்ஹாட்டின் தலைவராக மொகிதின் யாசின் நியமனம்

கசானா நேஷனல் பெர்ஹாட்டின் தலைவராக மொகிதின் யாசின் நியமனம்

838
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – நாட்டின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான கசானா நேஷனல் பெர்ஹாட்டின் (Khazanah Nasional Bhd) தலைவராக பிரதமர் மொகிதின் யாசின் நியமிக்கப்பட்டுள்ளதா நிதியமைச்சின் அறிக்கை ஒன்று தெரிவித்திருக்கிறது.

மேலும் நடப்பு நிதியமைச்சரான தெங்கு சாப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

முகமட் அஸ்லான் ஹாஷிம் வாரியத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் மற்றொரு நபராவார்.

கசானா நேஷனல் பெர்ஹாட்டின் தலைவரான முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கடந்து மார்ச் 25-ஆம் தேதி தனது பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்துதான் மொகிதின் யாசின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது பதவிக் காலத்தின்போது துன் மகாதீர் வழங்கிய தலைமைத்துவம், வழிகாட்டுதல், போன்றவற்றுக்கும் நன்றி தெரிவிப்பதாக நிதியமைச்சின் அறிக்கை தெரிவித்தது.