கோலாலம்பூர்: வெளிநாடுகளில் இருக்கும் மாணவர்கள் அந்தந்த நாடுகளிலேயே இருப்பதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
இம்மாதிரியான நேரத்தில் மாணவர்கள் தங்கள் பாதுகாப்பு மீது கூடுதல் அக்கறைக் கொண்டு சம்பந்தப்பட்ட நாடுகளின் விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்து கொள்வதுதான் சரியான தேர்வாக இருக்கும் என்று அவர் கூறினார்.
அரசாங்கம் அவ்வப்போது மானியங்கள் மூலம், வெளிநாடுகளில் உள்ள மாணவர்களுக்கு உணவு, தங்கும் வசதிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து தரும் என்றும் அவர் கூறினார்.