Home One Line P1 மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மாமன்னர் கண்காணித்தார்!

மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மாமன்னர் கண்காணித்தார்!

578
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூரைச் சுற்றி மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்படுத்தப்பட்ட தினத்தன்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா போக்குவரத்து நிலைமையை கண்காணித்தார்.

கொவிட் -19 பாதிப்பைத் தடுப்பதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைக்கு மக்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு தருவது தமக்கு திருப்தியை அளிப்பதாக மாமன்னர் தெரிவித்ததாக இஸ்தானா நெகாரா இன்ஸ்டாகிராம் வாயிலாகத் தெரிவித்தது.

18 வினாடிகள் கொண்ட ஒரு காணொளியும் அப்பக்கத்தில் அது வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைத் தொடர அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர் ஆதரவைத் தெரிவித்தார். மேலும் மக்கள் தொடர்ந்து தனிப்பட்ட சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளித்து வீட்டிலேயே இருப்பார்கள் என்று அவர் நம்புவதாக அது குறிப்பிட்டுள்ளது.