Home One Line P1 கொவிட்-19: இந்தோனிசியாவிலிருந்து திரும்பிய 43 மலேசிய மாணவர்களுக்கு தொற்று!

கொவிட்-19: இந்தோனிசியாவிலிருந்து திரும்பிய 43 மலேசிய மாணவர்களுக்கு தொற்று!

738
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஏப்ரல் 16-ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலைய நுழைவாயிலில் புதிய கொவிட் -19 பாதிப்பை சுகாதார அமைச்சகம் வெற்றிகரமாக கண்டறிந்தது.

இந்தோனிசியாவிலிருந்து திரும்பிய மலேசிய மாணவர்கள் இந்த பாதிப்புக்குள்ளாகி இருந்ததாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓர் ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

“இந்தோனிசியாவின் மாகேட்டான் மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் ஒன்றான டெம்போரோவிலிருந்து திரும்பிய 43 மாணவர்கள் இந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.”

#TamilSchoolmychoice

“மொத்தத்தில், 34 பேர் மலாக்கா மாநிலத்திலும், ஒன்பது பேர் கோலாலம்பூரிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்று நூர் ஹிஷாம் கூறினார்.

தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகள், வெளிநாட்டிலிருந்து திரும்பும் அனைத்து மலேசியர்களையும் தனித்து வைக்கவும் அரசாங்கத்தின் நடவடிக்கை பொருத்தமானது என்பதை இம்மாதிரியான வளர்ச்சி காட்டுகிறது என்று நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

“இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்கள் மலேசிய மக்களை பாதிக்காமல் இருப்பதற்காகவே இந்த நடவடிக்கை” என்று அவர் கூறினார்.