Home One Line P1 கொவிட்-19: செலாயாங்கில் 15,000 குடியிருப்பாளர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்!

கொவிட்-19: செலாயாங்கில் 15,000 குடியிருப்பாளர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்!

460
0
SHARE
Ad

கோலாலம்பூர்: செலாயாங்கில் சுமார் 15,000 குடியிருப்பாளர்கள் மீது கொவிட் -19 பரிசோதனையை அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி நடத்துவார்கள்.

இன்று முதல் தினமும், சுமார் 1,500 பேர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் அனைவரையும் ஒரு வாரத்திற்குள் தனியாக பிரிக்கலாம் என்றும் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அன்வார் மூசா தெரிவித்தார்.

கோலாலம்பூர் மொத்த சந்தை பகுதியைச் சுற்றியுள்ள ஆறு வெவ்வேறு நிலையங்களில் 500 சுகாதார ஊழியர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும், அங்கு அவர்கள் குடியிருப்பாளர்கள் மீது பரிசோதனைகளை மேற்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“இது ஒரு சவாலான விஷயம், ஏனெனில் இப்பகுதியில் ஒப்பீட்டளவில் அதிக மக்கள் தொகை உள்ளது,” என்று அவர் கூறினார்.

இப்பகுதியில் உள்ள மக்கள் தொகை தலைநகரில் உள்ள ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவைச் சுற்றியுள்ளவர்களை விட இரு மடங்கு அதிகமாகும்.