Home நாடு மறைந்து 6 ஆண்டுகளாகியும் மக்கள் நினைவில் நிற்கும் “ஜெலுத்தோங் புலி” கர்ப்பால் சிங்

மறைந்து 6 ஆண்டுகளாகியும் மக்கள் நினைவில் நிற்கும் “ஜெலுத்தோங் புலி” கர்ப்பால் சிங்

643
0
SHARE
Ad

“(கொவிட்-19 பிரச்சனைகளுக்கு மத்தியில் பலரது நினைவில் நிற்காது கடந்து போனது ஜசெகவின் முன்னாள் தலைவர் கர்ப்பால் சிங்கின் நினைவு நாள். கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி கார் விபத்தில் காலமான கர்ப்பால் சிங் குறித்து சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர் நக்கீரன்)

கெடா சட்டமன்றத்தில் ஜசெக அத்தியாயத்தைத் தொடங்கிய கர்ப்பால் சிங்கிற்கு ஏப்ரல் 17-ஆம் தேதி நினைவு நாள். குடும்ப சூழல் காரணமாக தன் இளமைக் கால பருவத்தை மாட்டுப் பண்ணையுடன் இணைத்துக் கொண்டிருந்த கர்ப்பால், பின்னர் சட்டத்துறையில் செம்மாந்த நிலைக்கு உயர்ந்தார்.

பொது (சிவில்) வழக்கு, குற்றவியல் (கிரிமினல் வழக்கு), பாலியல் வழக்கு, போதைப் பொருள் வழக்குகள், அரசியல் வழக்குகள் என்றெல்லாம் நாட்டில் பிரபலமான வழக்குகளை நடத்தி நீதித் துறையில் பாயும் புலியாக இருந்த கர்பால் சிங், அரசியலிலும் அப்படித்தான் திகழ்ந்தார்.

#TamilSchoolmychoice

மலேசிய அரசியல் களத்திலும் நீதித்துறை பரிபாலனத்திலும் குறிப்பிடத்தக்க இடத்தை நீண்ட காலத்திற்கு தக்க வைத்திருந்த கர்ப்பால் சிங், 1969 மே சம்பவத்திற்குப் பின் அரசியலில் இணைந்தார். 1970-ஆம் ஆண்டில் ஜனநாயக செயல் கட்சியில் உறுப்பியம் பெற்ற அவர், பிற்காலத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவராக உயர்ந்தார்.

தான் எதிர்கொண்ட முதல் தேர்தல் களத்தில் நாடாளுமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பை இழந்தாலும், சட்டமன்றத்திற்கு தேர்வு பெற்று, 1974-இல் கெடா மாநில சட்டமன்றத்தில் ஜசெக அத்தியாயத்தைத் தொடக்கி வைத்த பெருமை இவருக்கு உண்டு.

ஜெலுத்தோங் புலி என்று வருணிக்கப்பட்ட கர்ப்பால், தன்னுடைய அரசியல் பயணத்தில் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கினார்.

மாமன்னர், சுல்தான், நாடாளுமன்ற அவைத் தலைவர் குறித்தெல்லாம் விமர்சனத்திற்குரிய கருத்துகளை வெளியிட்டு பல தடவை நாடாளுமன்ற இடைநீக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார். காலமெல்லாம் எதிர்க்கட்சி வரிசையிலேயே அரசியல் புரிந்தாலும், ஜெலுத்தோங் புலி என்றும் சொல்லும் அளவிற்கு துணிவுமிக்கத் தலைவராக விளங்கினார் கர்ப்பால் சிங்.

எத்தனையோ சிறப்புகளுக்கு சொந்தக்காரரான கர்ப்பால் சிங், 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆல் நாள் எதிர்கொண்ட சாலை விபத்தில் அகால மரனம் அடைந்தார்.

அவரின் அரசியல் பங்களிப்பும் சட்டத் துறை ஈடுபாடும் மலேசிய வரலாற்றில் கல்வெட்டாக விளங்கும் என்பது மட்டும் திண்ணம். கர்ப்பால் மறைந்து 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சட்டத் துறையினர், பொதுமக்கள் மத்தியில் கர்ப்பாலின் நினைவுகள் மறையாமல் ப

அதுமட்டுமின்றி, தன்னைப் போலவே தனது குடும்ப வாரிசுகளையும் அரசியல் போராளிகளாக உருவாக்கி விட்டுத்தான் மறைந்தார் கர்ப்பால்.

இன்றைக்கு அவரது இரண்டு மகன்கள் (கோபிந்த் சிங் மற்றும் ராம் கர்ப்பால் சிங்) நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், ஒரு மகன் (ஜக்டிப் சிங் டியோ) சட்டமன்ற உறுப்பினராகவும், பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினராகவும் வீற்றிருக்கின்றனர். வழக்கறிஞரான அவரது மகளும் (சங்கீத் கவுர்) ஜசெக கட்சியின் வழி அரசியல் பணியாற்றி வருகிறார்.

-நக்கீரன்