கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள இவ்வேளையில், நாடாளுமன்றத்தை முக்கிய சேவையாக அறிவிக்குமாறு ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மே 18 அன்று மாமன்னர் நாடாளுமன்ற அமர்வை தொடக்கி வைத்த பிறகு காணொளி அமர்வு மூலமாக மக்களவை அமர்வை தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடத்த வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.
இதுவரையிலும் நாடாளுமன்ற மே 18 மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு ஏப்ரல் 28-க்குப் பிறகு நீட்டிக்கப்படுமா என்பதைப் பொருட்படுத்தாமல் நாடாளுமன்றத்தை ஒரு முக்கியமான சேவையாக அறிவிக்க வேண்டும் என்று லிம் கூறினார்.
கொவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்க நாடாளுமன்றம் ஓர் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட வேண்டும்.
“மேலும் நெருக்கடி காலங்களில் தேசிய ஒற்றுமையை ஊக்குவிப்பதற்காக இது தேவை” என்று அவர் கூறினார்.