Home One Line P1 கொவிட்-19: ஜோகூர் பெங்கெராங்கில் தொற்றுக் கண்ட புதிய குழுவினரை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது!

கொவிட்-19: ஜோகூர் பெங்கெராங்கில் தொற்றுக் கண்ட புதிய குழுவினரை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது!

548
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜோகூர் பெங்கெராங்கில் கொவிட்-19 தொற்றுக்கண்ட புதிய குழுவினரை சுகாதார அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

“நோயாளி மார்ச் 16 அன்று ஒரு தனியார் மருந்தகத்தில் சிகிச்சை பெற்றார் மற்றும் டெங்கி காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.”

“அடுத்த நாள், நோயாளி மார்ச் 18 அன்று பெங்கெராங்கிற்குத் திரும்புவதற்கு முன்பு சிலாங்கூரில் உள்ள உறவினர்களைப் பார்க்க பல இடங்களுக்குச் சென்றார்,” என்று சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

நோயாளியின் நிலை மோசமடையத் தொடங்கியதாகவும், ஆபத்தான நிலையில் மார்ச் 20 அன்று ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்  கூறினார்.