கோலாலம்பூர்: அனைத்து மலேசியா ஏர்லைன்ஸ் பயணிகளும் வருகிற வியாழக்கிழமைத் தொடங்கி முகக்கவசம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
கொவிட்-19 பரவுதலைக் குறைப்பதற்காக அவர்கள் தங்கள் தகவல்களை சரிபார்க்கும் இடம் தொடக்கி விமானத்தின் உள்ளே நுழைந்து, தங்கள் உடமைகளை வைக்கும் போதிலும் அவ்வாறு அணிந்திருக்க வேண்டும் என்று அது தெரிவித்துள்ளது.
அனைத்து உள்நாட்டு, அனைத்துலக மற்றும் சிறப்பு விமானங்களில் குழந்தைகளைத் தவிர்த்து அனைத்து பயணிகளுக்கும் இந்த தேவை பொருந்தும் என்று மலேசியா ஏர்லைன்ஸ் இன்று புதன்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமானத்தில் ஏறும் போது முகக்கவசம் அணியாத பயணிகளை மலேசியா ஏர்லைன்ஸ் ஏற்றுக்கொள்ளாது என்று அது தெரிவித்துள்ளது.
“பயணிகளின் வசதிக்காக, குறிப்பாக நீண்ட தூர விமானங்களில், உங்கள் சொந்த பயன்பாட்டிற்காக கூடுதல் முகக்கவசங்கள் மற்றும் தொற்று தடை பொருள்களைக் கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறீர்கள்” என்று அது கூறியது.