Home One Line P2 தமிழ்நாடு : முழு ஊரடங்கு கட்டுப்பாடு அறிவிப்பால் சந்தைகளில் குவிந்த மக்கள்

தமிழ்நாடு : முழு ஊரடங்கு கட்டுப்பாடு அறிவிப்பால் சந்தைகளில் குவிந்த மக்கள்

558
0
SHARE
Ad

சென்னை – தமிழகத்தின் 5 நகர்களில் நாளை மாலை முதல் முழு ஊரடங்கு அமுலாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை சந்தைகளில் கூடல் இடைவெளியின்றி ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே, முன்கூட்டியே அவகாசம் அளிக்காமல் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை 5 நகர்களில் முழு ஊரடங்குக் கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மாலை முதல் இந்த ஊரடங்கு அமுலாக்கத்திற்கு வரும் எனவும் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து இன்று சந்தைகளிலும், கடைகளிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி பொருட்களை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே ஊரடங்கு அமுலில் இருக்கும் பட்சத்தில் “ஊரடங்குக்குள் இன்னொரு ஊரடங்கு” ஏன் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

இந்நிலையில் இன்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 66 பேர்கள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,821 ஆக உயர்ந்திருக்கிறது.

செய்தியாளர்கள் 27 பேர்களுக்கு கொவிட்-19 தொற்று பீடித்திருப்பதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக சுகாதார அமைச்சின் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படவில்லை.

இதற்கிடையில் இந்தியா முழுமையிலும் கொவிட்-19 தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 24,942 ஆக அதிகரித்திருக்கிறது.

மரண எண்ணிக்கை 779 ஆக அதிகரித்திருக்கிறது.