சிங்கப்பூர் – இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 25) ஒரு நாளில் 618 புதிய கொவிட் 19 தொற்றுகள் கண்டிருப்பதாக சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கிறது.
இதன் மூலம் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 12,693 ஆக அதிகரித்திருக்கிறது.
இவர்களில் சிங்கப்பூரியர்கள் மற்றும் சிங்கையில் நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்டவர்களில் 7 பேர்களுக்கு மட்டுமே கொவிட்-19 தொற்று கண்டிருக்கிறது. எஞ்சியவர்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆவர்.
சிங்கையில் இருக்கும் 323,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களில் 3 விழுக்காட்டினருக்கு அதாவது சுமார் 9,929 பேர்களுக்கு கொவிட்-19 தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நேற்று 897 ஆக இருந்த கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை இன்று கணிசமாகக் குறைந்திருக்கிறது.
பெரும்பாலான பாதிப்புகள் தொழிலாளர்கள் கூட்டமாகத் தங்கியிருக்கும் குடியிருப்புகளில் ஏற்பட்டிருக்கின்றன.