கடந்த 2019 ஓராண்டுக்கு மட்டும் சுந்தர் பிச்சைக்கு அல்பாபெட் 281 மில்லியன் டாலர் சம்பள சலுகைகளை வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இதில் பெரும்பான்மையான தொகை பங்குகள் வடிவில் வழங்கப்படும்.
கொவிட்-19 பாதிப்புகளுக்கு மத்தியில் அல்பாபெட் நிறுவனத்தை இலாபகரமாகச் செலுத்தும் பெரும் பொறுப்பை சுந்தர் கொண்டிருப்பதால் அவருக்கு இவ்வளவு பெரிய சம்பளம் வழங்கப்படுகிறது.
2019-இல் அவருடைய ஆண்டு சம்பளம் 650,000 டாலர்களாக இருந்தது. இந்த ஆண்டில் அவரது சம்பளம் ஆண்டுக்கு 2 மில்லியன் டாலர்களாக உயரும்.
அல்பாபெட் நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விட 1,085 மடங்கு அதிக சம்பளத்தை 47 வயதான சுந்தர் பெறுகிறார்.