Home One Line P2 பாலிவுட் நடிகர் இர்பான் கான் 54-வது வயதில் காலமானார்!

பாலிவுட் நடிகர் இர்பான் கான் 54-வது வயதில் காலமானார்!

591
0
SHARE
Ad

மும்பை: பாலிவுட் நடிகர் இர்பான் கான் இன்று புதன்கிழமை மும்பையில் தனது 54-வயதில் காலமானார்.

பெருங்குடல் தொற்றுநோய் காரணமாக செவ்வாய்க்கிழமை அவர் கோகிலாபென் அம்பானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 2018- ஆம் ஆண்டில் அவருக்கு நியூரோஎண்டோகிரைன் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

இர்பான் கான் 2019- இல் பல மாதங்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றார். ஹோமி அடஜானியாவின் ஆங்ரேஸி மீடியம் அவரது கடைசி படமாகும்.

#TamilSchoolmychoice

மக்பூல், பான் சிங் தோமர், தி லஞ்ச்பாக்ஸ், ஹைதர், பிகு மற்றும் பல குறிப்பிடத்தக்க திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர், ஜுராசிக் வேர்ல்ட், தி அமேசிங் ஸ்பைடர்மேன் மற்றும் லைப் ஆப் பை போன்ற ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.