Home One Line P1 பிபிஎன்: இரண்டாம் கட்ட நிதி உதவி மே 4 முதல் தொடங்கப்படும்

பிபிஎன்: இரண்டாம் கட்ட நிதி உதவி மே 4 முதல் தொடங்கப்படும்

537
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பி40 மற்றும் எம்40 பிரிவுகளுக்கான பந்துவான் பிரிஹாதின் நேஷனல் (பிபிஎன்) உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான நிதி வழங்கல் மே 4 முதல் வழங்கப்படும்.

7.74 மில்லியன் பெறுநர்கள் பிபிஎன் முதல் கட்டமாக 5.47 பில்லியனை ரிங்கிட்டைப் பெற்றுள்ளதாக நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜாப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

“வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு பணம் வழங்கும் செயல்முறை ஏப்ரல் 17 முதல் தொடங்கி, நாடு முழுவதும் உள்ள பேங்க் சிம்பானான் நேஷனல் வங்கிகளில் 157,000- க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.”

#TamilSchoolmychoice

“அனைத்து பி40 மற்றும் எம் 40 பிபிஎன் பெறுநர்களுக்கும் கட்டம் 2-இன் பணம் வழங்குதல், மே 4 முதல் செய்யப்படும்” என்று நேற்று செவ்வாயன்று அவர் கூறினார்.

ஏப்ரல் 26 வரை, அமைச்சகம் 3.26 மில்லியனுக்கும் அதிகமான புதிய விண்ணப்பங்களையும் முறையீடுகளையும் பெற்றுள்ளது.

இவற்றில், 2.96 மில்லியன் புதிய விண்ணப்பங்கள் மற்றும் 305,000 முறையீடுகள் ஆகும்.

“இந்த செயல்முறை ஏப்ரல் 30 வியாழக்கிழமை நிறைவடையும். மறுஆய்வு செயல்முறை முடிந்ததும் அடுத்த வாரம் கட்டண அறிவிப்புகள் வெளியிடப்படும்” என்று அவர் கூறினார்.