கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாடு கட்டம் நான்கு இன்றி புதன்கிழமை, தொடங்க இருக்கும் நிலையில், குடும்பத் தலைவர்கள் மற்றொரு குடும்ப உறுப்பினருடன் உணவு, மருந்து அல்லது அன்றாட தேவைகளுக்காக வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988- இன் கீழ் தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் (தொற்றுநோய்களின் உள்ளூர் நடவடிக்கைகள்) 2020 புதுப்பித்தலின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மாமன்னர் சுல்தான் அப்துல்லா ஆகியோரின் அதிகாரத்தின் கீழ் அரசாங்க செய்திகளில் வெளியிடப்பட்ட இந்த விதி, இன்று முதல் அடுத்த மே 12 வரை நடைமுறையில் உள்ளது.
எவ்வாறாயினும், அவர்களுடன் வெளியே வந்த நபர் அதே இல்லத்தின் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.