போலி பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை கொடுப்பதால், வளாகத்தில் கொவிட்19 நேர்மறையான சம்பவம் இருந்தால், வந்து சென்றவர்களை தொடர்பு கொள்வது கடினம் என்று அவர் கூறினார்.
“பலர் ‘பாடாங்’, சூப்பர்மேன் மற்றும் பேட்மேன் போன்ற பெயர்களையும், சரியான தொலைபேசி எண்களையும் கொடுக்கவில்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன். எனவே ஏதாவது நடந்தால், அவர்களைத் தொடர்புகொள்வது கடினம்.”
“மக்கள் , தயவுசெய்து அவர்களின் உண்மையான பெயர்களை இடுங்கள் (ஏனென்றால்) அந்த பகுதியில் கொவிட்19 நேர்மறை சம்பவங்கள் இருந்தால், அவசரகாலத்தில் ரொடர்புக் கொள்ளவது எளிதாகும்” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ஒரு சிலர் தகவல்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, உங்கள் அடையாள அட்டை எண் மற்றும் வீட்டு முகவரி உள்ளிடவைகளை அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.