Home One Line P1 தோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் அணிகளுக்கு பயிற்சி அளிக்க அரசு சிறப்பு தளர்வு

தோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் அணிகளுக்கு பயிற்சி அளிக்க அரசு சிறப்பு தளர்வு

687
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது தோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் அணிகளுக்கு பயிற்சி அளிக்க அரசு சிறப்பு தளர்வு அளித்துள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

தோக்கியோ 2020 விளையாட்டில் ஈடுபட்டுள்ள 57 விளையாட்டு வீரர்கள் உட்பட 265 நபர்களுக்கு ஜூன் 1- ஆம் தேதி ஏற்பாடுகள் மற்றும் பயிற்சிகளைத் தொடங்க அரசு சிறப்பு தளர்வு அளித்துள்ளது என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு தோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை  அமைச்சர் டத்தோஸ்ரீ ரீசால் மெரிக்கன் நைனா மெரிக்கன் அளித்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து நடமாட்டக்  கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான சிறப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இன்று இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இந்த பயிற்சி மூன்று மையப்படுத்தப்பட்ட பயிற்சி முகாம்களில் நடத்தப்படும்.  புக்கிட் ஜாலில் விளையாட்டு வளாகம், 181 நபர்கள், மலேசிய பூப்பந்து அரங்கம், புக்கிட் கியாரா (56 நபர்கள்) மற்றும் லங்காவியில் உள்ள தேசிய படகோட்டம் பயிற்சி மையம் (28 நபர்கள்) சம்பந்தப்பட்டுள்ளனர்.

“மையப்படுத்தப்பட்ட பயிற்சி முகாமின் முதல் கட்டம் ஜூன் 1 முதல் 30 வரை இருக்கும்.  மேலும் பதிவு செய்யும் போது கொவிட்-19 பரிசோதனை  நடத்தப்படும்.”

“இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 30 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் அணுகுமுறையைப் பயன்படுத்தும்.” என்று அவர் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.