Home இந்தியா குடிமை பணிகளுக்காக அணு உற்பத்தியை தொடர ஈரானுக்கு உரிமை இருக்கிறது – இந்தியா

குடிமை பணிகளுக்காக அணு உற்பத்தியை தொடர ஈரானுக்கு உரிமை இருக்கிறது – இந்தியா

590
0
SHARE
Ad

mohansinghபெர்லின், ஏப். 12- ஈரான் அணுஆயுத உற்பத்தியை பெருக்கும் நோக்கில் பல்வேறு செயல்திட்டத்தை நிறைவேற்றி வருகின்றது என்று அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனால் அமெரிக்கா மற்றும் ஐ.நா-வின் பொருளாதரத்தடைகளை ஈரான் சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஜெர்மன் சென்றுள்ள இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங், ஈரான் தனது குடிமைப்பணிகளுக்காக அணு உற்பத்தியை தொடர உரிமை இருக்கிறது.

எனவே, சர்ச்சைக்குரிய இந்த அணுசக்தி திட்டங்கள் குறித்து இராஜதந்திர தீர்வுகள் காணப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். இந்தியாவிற்கு தேவையான எண்ணெயை அதிகம் வழங்கும் முக்கிய நாடாக ஈரான் விளங்குவது குறிப்பிடத்தக்கது.