Home One Line P1 குடிநுழைவுத் துறை முகாமில் 35 பேருக்கு கொவிட்19 தொற்று

குடிநுழைவுத் துறை முகாமில் 35 பேருக்கு கொவிட்19 தொற்று

563
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புக்கிட் ஜாலில் குடிநுழைவுத் துறை முகாமில் ஒரு புதிய கொவிட்19 தொற்றுக் குழு கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள 35 சட்டவிதோர குடியேறிகளுக்கு இந்த நோய் கண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

“அவர்கள் எவ்வாறு கிருமிக்கு ஆளானார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மார்ச் 18 அன்று அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் ” என்று சுகாதார அமைச்சு இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

“நாடு கடத்தப்பட்டவர்களில் சிலர் கொவிட்19- க்கு ஆளாகி இருப்பதை அனைத்துலக சுகாதார ஒழுங்குமுறைக் குழுவால் எங்களுக்கு அறிவிக்கப்பட்டது.”

#TamilSchoolmychoice

“எனவே ‘பிளாக் ஏ’-யில் உள்ள அனைவரையும் நாங்கள் பரிசோதனை செய்தோம். அவர்களில் சிலர் அறிகுறிகளைக் காட்டினர். மொத்தத்தில், அவர்களில் 35 பேர் கொவிட்19 நோய்க்கு நேர்மறையானவர்கள் என்று கண்டறியப்பட்டது, ” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து பிளாக் ஏ-ல் புதிய கைதிகள் யாரும் இல்லை என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

“பிளாக் ஏ- இல் உள்ளவர்கள் அதை விட பிற்பகுதியில் மையத்திற்கு வந்த கைதிகளுடன் கலக்கவில்லை என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

“அவர்கள் எவ்வாறு இந்த தொற்றுக்கு ஆளாகி இருக்க முடியும் என்பதை நாங்கள் விசாரிக்க வேண்டும். ஒருவேளை அங்குள்ள ஊழியர் அல்லது சமையலறை ஊழியர்களிடமிருந்து? ” என்று அவர் கூறினார்.