கோயிலின் தலைவர்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனிநபர்களிடமிருந்து இந்த அறிக்கைகள் பெறப்பட்டதாக சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோ பாட்சில் அகமட் தெரிவித்தார்.
“தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் விதிமுறைகள் 2020- இன் கீழ் காவல் துறையினர் விசாரணை தொடங்கி உள்ளனர்.
“தவிர, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 507 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998- இன் கீழ் விசாரணையும் நடத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.
ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள ஒரு கோயிலில் திருமண நிகழ்ச்சியை நடத்தியதாக இணைய செய்தித்தளம் குறிப்பிட்டிருந்தது. அதில் சுமார் 100 நபர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.