Home One Line P1 மே 27 முதல் காரில் நான்கு பேர் மட்டும் பயணம் செய்யும் நடைமுறை தளர்வு

மே 27 முதல் காரில் நான்கு பேர் மட்டும் பயணம் செய்யும் நடைமுறை தளர்வு

973
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மே 27- ஆம் தேதி முதல் ஒரு காரில் நான்கு நபர்கள் பயணம் செய்யும் நடைமுறையை அரசாங்கம் தளர்வு செய்ய ஒப்புக் கொண்டுள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

புதிய விதிகளின் கீழ், ஒரு வாகனத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 1987- ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி காரின் இருக்கைகளைப் பொறுத்தது என்று அவர் கூறினார்.

“நான்கு பேர் அமரும் தனிநபர் காரில், ஓட்டுனர் உட்பட மூன்று பயணிகளை மட்டுமே அனுமதிக்கிறது. அதே நேரத்தில் எம்பிவி ஏழு பேரை ஏற்றிச் செல்ல முடியும்” என்று அவர் புத்ராஜெயாவில் ஓர் ஊடகச் சந்திப்பில் கூறினார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், மற்ற நிபந்தனைகளுக்கு இடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் ஒரே வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.