Home One Line P1 கொவிட்19: புதிதாக 103 சம்பவங்கள் பதிவு- மலேசியர்கள் 12 பேர்

கொவிட்19: புதிதாக 103 சம்பவங்கள் பதிவு- மலேசியர்கள் 12 பேர்

444
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 103 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 7,732 -ஆக உயர்ந்தது.

எனினும் இன்று மரணங்கள் ஏதும் நிகழவில்லை.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 103 பாதிப்புகளில் 7 சம்பவங்கள் இறக்குமதி செய்யப்பட்டவை. மீதமுள்ள 96 சம்பவங்களில் 84 பேர் வெளிநாட்டினர். 12 பேர் மலேசியர்கள் என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இன்று 66 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,235-ஆக உயர்ந்தது.

1,382 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் எண்மர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில், இருவர் சுவாசக் கருவி தேவைப்படுகிறது.