கோலாலம்பூர்: கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மதுபான உரிமங்களுக்கான அனைத்து புதிய விண்ணப்பங்களையும் முடக்குவதாக அறிவித்தது.
“மதுபான உரிமங்களுக்கான புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன.”
“உரிமம் பெறாத மதுபான விற்பனை நடவடிக்கைகளை இயக்கும் எந்தவொரு தரப்பிற்கும் எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று டிபிகேஎல் உரிமம் மற்றும் மேம்பாட்டுத் துறை இன்று செவ்வாய்க்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துக்களைத் தொடர்ந்து புதிய மதுபான உரிமங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கான ஊராட்சி மன்றத்தின் முன்மொழிவை பரிசீலிக்க தனது அமைச்சகம் தயாராக இருப்பதாக வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சர் சுரைடா கமாருடின் தெரிவித்தார்.