கோலாலம்பூர்: திருமணத்திற்கான நோக்கத்திற்காக மாநிலங்களுக்கு இடையேயான பயணம் இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்களும் எடுப்பதற்கு அனுமதி உள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறுகிறார்.
திருமணம் முடிக்க மாநிலங்களை கடக்க விரும்புவோர், இருப்பினும், முதலில் பயணம் செய்வதற்கு முன்னர் காவல் துறையின் அனுமதியைப் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.
“சிறப்பு அமைச்சர் கூட்டம், காவல் துறையின் அனுமதியுடன், திருமணத்தை நடத்தும் நோக்கத்திற்காக மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களை அனுமதிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
“சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் 20 பேருக்கு மேல் இல்லாதது, கூடல் இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.” என்று அவர் கூறினார்.
திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) முதல் வெளிப்புற அமைப்புகளில் மட்டுமே நடைபெற அனுமதிக்க கூட்டம் ஒப்புக் கொண்டுள்ளது.
“இருப்பினும், திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட விழாக்களுக்கு மட்டுமே இது பின்பற்றப்படும். மேலும் நடைமுறைக்கு இது உட்படுத்தப்படுகின்றன.”
“திருமண வரவேற்புகள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.” என்று அவர் கூறினார்.
ஜூன் 10 முதல் விளம்பரங்கள், திரைப்படங்கள் மற்றும் பலவற்றிற்கான படப்பிடிப்பிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.