Home One Line P1 கொவிட்19: 20 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மலேசியர்கள்

கொவிட்19: 20 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மலேசியர்கள்

536
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 7,877-ஆக உயர்ந்தது.

எனினும் இன்று மரணங்கள் ஏதும் நிகழவில்லை.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 20 பாதிப்புகளில் 15 சம்பவங்கள் இறக்குமதி செய்யப்பட்டவை. மீதமுள்ள 5 சம்பவங்களில் 3 பேர் வெளிநாட்டினர். 2 பேர் மலேசியர்கள் என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இன்று 66 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,470-ஆக உயர்ந்தது.

1,292 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில், இருவர் சுவாசக் கருவி தேவைப்படுகிறது.