Home One Line P1 கொவிட்19: 41 புதிய சம்பவங்கள் பதிவு- 6 பேர் மலேசியர்கள்

கொவிட்19: 41 புதிய சம்பவங்கள் பதிவு- 6 பேர் மலேசியர்கள்

546
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,494-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 41 பாதிப்புகளில், 3 சம்பவங்கள் இறக்குமதி சம்பவங்களாகும். எஞ்சிய 38 பேர் உள்ளூரிலேயே தொற்று கண்டவர்கள். 32 பேர் வெளிநாட்டினர், 6 பேர் மலேசியர்கள்.

#TamilSchoolmychoice

இன்று 54 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,400-ஆக உயர்ந்தது.

973 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.