Home One Line P1 நாடாளுமன்ற இட ஒதுக்கீட்டில் மாற்றம் இருக்கலாம்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

நாடாளுமன்ற இட ஒதுக்கீட்டில் மாற்றம் இருக்கலாம்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

709
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தல் குறித்த இட ஒதுக்கீடு சம்பந்தமாக எந்தவொரு விவாதத்திலும் தனது கட்சி பங்கேற்கவில்லை என்று மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இருப்பினும், மலேசியாகினி தொடர்பு கொண்டு பேசியபோது, ​​இது குறித்த கலந்துரையாடல் எதிர்காலத்தில் நடக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

15- வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்ற ஊகங்கள் குறித்து அவரிடம் வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நாடாளுமன்ற இடங்களை ஒதுக்குவது குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்பக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை என்றும், மஇகா இன்னும் ஒன்பது நாடாளுமன்ற இடங்களில் போட்டியிடும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும், இட ஒதுக்கீட்டில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.